ஆறுநாட்டு வேளாளர் தலைமைச்சங்கத்தின் கல்வி திருவிழா கடந்த 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வேலூர் VIT பல்கலைக்கழகத்தின் வேந்தர் கல்விக்கோ திரு. Dr. G. விஸ்வநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சுமார் 1100 மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ. 20.00 இலட்சத்திற்கு வழங்கினார். இந்த கல்வித்திருவிழாவிற்கு திருச்சி மங்கள் & மங்கள் உரிமையாளர் திரு. P. மூக்கப்பிள்ளை அவர்கள் நம் சமூகத்தில் 10th மற்றும் +2வில் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண் மற்றும் மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கினார். விழாவிற்கு சங்கத்தின் தலைவர் Dr. P. செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார். செயலாளர் Er. A. சதீஸ்வரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். துணை தலைவர் திரு. P.புரவி அவர்கள், மதுரை ஆறுநாட்டு வேளாளர் சங்கம் தலைவர் திரு. சு.யோகராஜா அவர்கள், திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் தலைமைச்சங்கம் முன்னாள் தலைவர் திரு. S. தனபால் அவர்கள், புதுக்கோட்டை P.S.K மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தலைவர் திரு. P. கருப்பையா ஆகியோர்கள் முன்னிலை வகித்தார். பொருளாளர் திரு. T. செந்தில்குமார் நன்றியுரை ஆற்றினார். விழாவில் இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபையின் தலைவர் திரு. தெவராயப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் திருச்சி மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திரு. தர்மன் D. ராஜேந்திரன் அவர்கள் துறையூர் ஆறுநாட்டு வேளாளர் சங்க தலைவர் திரு. திருஞானம் அவர்கள் திருச்சி மாநகர சங்க தலைவர் திரு. G. ராஜசேகரன் அவர்கள் கலந்துக்கொண்டனர். விழாவில் திரு. T. வைத்தியலிங்கம் பிள்ளை [ASRM] அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கூட்ட முடிவில் விழாவிற்கு வருகை தந்த மாணவ - மாணவிகளுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக மடிக்கணினி, இரண்டாம் பரிசாக கணினியும், மூன்றாம் பரிசாக கால்குலேட்டர் சிவானி கல்வி குழுமத்தின் சார்பாக வழங்கப்பட்டது.