12.03.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆறுநாட்டு வேளாளர் சிதம்பர மடம் திறப்பு விழாவில் தருமபுர ஆதினம் சுவாமிகள் கலந்துக்கொண்டு நம் சமுதாய மக்களுக்கு ஆசி வழங்கி சிறப்புரை ஆற்றினார். ஆதின சுவாமிகள் தனது சிறப்புரை ஆறுநாட்டு வேளாளர் மக்கள் இறை அருள் திருப்பணிகள் செய்வதிலும், அன்னதானம் வழங்குவதிலும் முதன்மையாக திகழ்கின்றனர் என்றும், தங்களுடைய கலாச்சாரம், பண்பாடு ஆகிய நற்பண்புகளை பேணிகாப்பவர்கள் என்றும், தங்களது கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றும் புகழாரம் சூட்டினார்.