ஆறுநாட்டு வேளாளர் அளித்த,
சிதம்பரம் செப்பேட்டுச் சாசனம் கூறும் செய்தி:
இரண்டு செப்பேட்டுச் சாசனம், அவ்விரு ஏடுகளின் இருபுறங்களிலும் எழுதப்பட்டு திகழ்கின்றது. முதல் ஏட்டின் முன் பகுதியில் உள்ள....
“சூரியன் உருவத்தின் அருகே அருள்மிகு சிவலிங்கமும், நின்ற கோல அருள்மிகு உமாதேவியின் உருவமும், அடுத்து நடுவே ஸ்ரீ நடராஜப் பெருமானும் அருகே சிவகாமசுந்தரியின் நின்ற கோல வடிவமும், அடுத்து சந்திரனின் உருவமும்” வரை கோட்டு ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.
ஸ்வஸ்திஸ்ரீ என்ற மங்கலச் சொல்லுடன்தொடங்கும் இச்சாசனம் விஜய நகர பேரரசர் வீர பிறதாப** ஸ்ரீ சதாசிவதேவ மகாராயர் ஆட்சி காலத்தில் சாலிவாகன – சக வருடம் 1413இல் எழுதப்பெற்றதாகும்.(இவ்வருடம் ஆங்கில ஆண்டு கி.பி. 1491ஐ குறிப்பதாகும்).
அவ்வருடமானது தமிழில் விரேதிகிருது ஆண்டாகும். அதில் ஆடி மாதம் வளர் பிறையில் அனுச நட்சத்திரமும் எகாதாசி திதியும் உள்ள திங்கட்கிழமையன்று இச்சாசனம் எழுதப் பெற்றதாகக் குறிப்பு உள்ளது.
01. திருப்புடையூர் நாடு,
02. பாசகர் குரட்டுப்பத்து
03. கீழ் வள்ளுவப்பநாடு
04. மேல் வள்ளுவப்பநாடு
05. கரிகாலிநாடு
06. ஆமூர் நாடு
ஆகிய ஆறு நாடுகளில் வாழும் வேளாளர்கள் இணைந்து “ஆறுநாட்டு வேளாளர்கள்” தர்மமாகச் செய்த கொடையை பற்றி இச்செப்பேட்டுச் சாசனம் விவரிக்கின்றது.
இரண்டாம் பட்டயம் கூறுவது:
இந்த வேளாளர்கள் ஒன்றினைந்து, இந்த ஆறுநாட்டிலுள்ளவர்கள் ஒருதலைக் கட்டுக்கு ஒரு பணம் விழுக்காடு கொடுக்கவும், அன்னிய தேசம், அன்னிய இடங்களில் வசிக்கும் இந்த ஆறுநாட்டு வேளாளர்கள் அவர்கள் இருக்குமிடத்தில் இருந்தவாறே தலைகட்டுக்கு ஒருபணம் விழுக்காடு கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஆறுநாட்டு வேளாளர்களின் புத்திரர்களுக்கும் பின்பு வரும் சந்ததியினரும் சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த தர்மத்தைச் செய்து வர வேண்டும் என்றும், பணம் கொடுக்காதவர் பொருளைக் கைப்பற்றி அடகுவைத்தாவது கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி பெறப்பட்ட பணம் கொண்டு ஆறுநாட்டு வேளாளர் தர்மமாக, சிதம்பரத்தில் இரண்டாம் திருவீதியான, புகழாபரணத் திருவீதியில் கிழக்கு தெருவில் கீழச்சன்னதி நாரா சந்திற்கு தென் பகுதியில் கீழச்சிறகில், ஒரு மனை வாங்கப்பெற்று அதில் மடமும் கட்டி அந்த மடத்திற்கு, மதுரை முத்தனந்த வாசல் சிவபிரகாச பண்டாரம் ஆதினாபதிக்கு கூத்தாடும் பனையாண்டார் நயினார் என்பவரை நியமித்து கட்டளை அமைக்கப் பெற்றது.
1830-1891:
இக்காலக் கட்டத்தில் கரியமாணிக்கம் கிராமத்தில் நம் இனத்தைச் சார்ந்த வீரப்பிள்ளை மற்றும் அவரது சகோதரர் சின்னதம்பி பிள்ளை ஆகியோர் விவசாயம் செய்து வாழ்ந்தார்கள். வீரப்பிள்ளை தம்பதியர்க்கு கருப்பண்ணன் (1830களில்) மற்றும் பழனியாண்டி என்கின்ற இரு புதல்வர்கள் பிறந்தனர். இவர்கள் சிறு வயதிலேயே தம் வாழ்கையே தந்தையோடு அவரது விவசாய தொழிலில் ஈடுபடுத்திக்கொண்டனர்.
இத்தொழிலில் போதிய வருமானம் இல்லை என கருதிய கருப்பண்ணப் பிள்ளை, தான் மட்டும் அதிக வருமானம் தேடி, திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு செவத்தை (வருமானத்தை) பெருக்க இடம் தேடி வந்தார். இங்கு, ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு ஜவுளி கடையில் வேலைக்கு சேர்ந்து சம்பளத்திற்கு பணிபுரிந்து பணம் ஈட்டியுள்ளார். இவர் தான் ஈட்டிய பணத்தை மிகக் கவனமாக சேகரித்து வைத்து, தொடர்ந்து ஸ்ரீரங்கம் பகுதியில், சொந்தத்தில் ஜவுளி வியாபாரம் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். ஜவுளி வியாபாரத்தில்தலைசிறந்தது விளங்கிய இவரை ஜவுளி கருப்பண்ணப் பிள்ளை என்று அப்பகுதியினர் அழைத்தார்கள். தனது திறமையால் தனது வியாபாரத்தை மிகவும் சிரத்தையோடும், பேரும் புகழும் விளங்க உழைத்து பெரும் வருமானம் பெற்றார். தான் பெற்ற செல்வத்தை கொண்டு ஸ்ரீரங்கம் அடயவளஞ்சான் தெருவில் ஒரு வீடு வாங்கி குடியேறினார்.
ஆறுநாட்டு வேளாளர் சாதியினராகிய இவர் ஜவுளி வியாபாரம் தொழில் செய்து பெரிதும் பணம் ஈட்டி செல்வந்தராக வாழ்ந்து, அந்த வருமானத்தில் தர்மகாரியங்கள் என்ற வகையில் திருவானைக்காவல் கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் மற்றும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரிக்கு நித்திய பூஜைகளுக்கு கைங்காரியங்கள் செய்து வந்துள்ளார்.
ஓமாந்தூர் மகாநாடு 1916:
1916ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி நடைபெற்ற மாநாட்டு படி.....
இம் மகாநாட்டில் நம் இனத்தார்க்கு தொடர்ந்து சேவை செய்ய புதிதாக 16 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்களாக கீழ் கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்
01. ஓமாந்தூர் ஆனையா கவுண்டர் குமாரர் தொம்ம பூசாரி
02. முசிறி தாலுக்கா ஓமாந்தூர் சீ. சடயக் கவுண்டர் குமாரர் பூனாச்சிக் கவுண்டர்
03. தொலையா நத்தம் மாரியாக் கவுண்டர் குமாரர் பெரியண்ணக் கவுண்டர்
04. சேருகுடி முத்தியக்கவுண்டர் குமாரர் பூசாரி மருதையா கவுண்டர்
05. சேருகுடி சடையக் கவுண்டர் குமாரர் சிதம்பரக் கவுண்டர்
06. ஆரூர் கிராம மதுரா ஆழம்பட்டி கருப்பக்கவுண்டர் குமாரர் முனிசிப் முத்தையக் கவுண்டர்
07. ஓமாந்தூர் அய்யங்குடி முத்தியைக் கவுண்டர் குமாரர் மாரியாக்கவுண்டர்
08. நடுவலுர்ரி ஆண்டியா கவுண்டர் குமாரர் முனிசிப் கருப்பக்கவுண்டர்
09. தேனூர் முத்திய கவுண்டர் குமாரர் மருப்பக்கவுண்டர்
10. சூரம்பட்டி தாண்டவக் கவுண்டர் முனிசிப் வீரக்கவுண்டர்
11. தும்பலம் பெரியண்ணக கவுண்டர் குமாரர் இராமசாமி கவுண்டர்
12. வடமலைப்பட்டி சப்பாணிக் கவுண்டர் குமாரர் கருப்பண்ண கவுண்டர்
13. இஸ்திமிரா முருகூர் ரா. மாரிகங்காணியார்குமாரர் இராமசாமி கவுண்டர்
14. ஓமாந்தூர் சின்னா தேவராய கவுண்டர் குமாரர் பெரியண்ணக்கவுண்டர்
15. சேருகுடி ஆலடி கவுண்டர் குமாரர் முனிசிப் இராமசாமி கவுண்டர்
16. சேருகுடி மகாலிங்கம் கவுண்டர் குமாரர் இராமசாமி கவுண்டர் ஆகியோர் ஆவார்கள்.
இக்கமிட்டி உறுப்பினர் நம் மக்களோடு ஏற்படுத்திக் கொண்ட உடன் படிக்கையானது, இதில் 7 முதல் 12 இலக்கமிட்ட ஆறு பெயர்களை கமிட்டி மெம்பர்களாகவும், 13 இலக்கமிட்டவரை டிரஸரராகவும், 14, 5 இலக்கமிட்டவர்கள் டிரஸ்டி மேனேஜர்களாகவும் 16 இலக்கமிட்டவர் ஏஜன்ட் என்கிற ஆடிட்டராகவும் நியமித்து கீழ்கண்ட ஏற்பாடுகளை செய்து கொண்டார்கள்.
கமிட்டி மெம்பர்கள் :
1. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சத்திரத்தில் கூட்டம் கூடி,சத்திரத்து வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து கையெழுத்து இட வேண்டும்.
2. மேனேஜர், ஏஜெண்டிடம் குறையிருப்பின் மற்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி ஆவன செய்ய வேண்டியது,
3. டிரஸரர் சத்திரம் சம்பந்தமாக வரவேண்டிய புரோநோட்டு கணக்குகளை முறையாக வசூல் செய்யவும் இருக்கும் பணத்தை உறவினர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 100க்கு 10 அணா வீதம் வட்டிக்கு கொடுத்து வரவு செலவு கணக்குகளை பராமரித்து வர வேண்டும்.
4. டிரஸ்ட் மேனேஜர்மார் சத்திரத்தின் நேர் வரவு செலவுகளை கவனித்து, சத்திர சம்பந்தமான கடை வாடகைகளை உயர்த்தி வசூல் செய்ய வேண்டும்.
5. 16 பிராமணர்களுக்கு மதிய போஜனம் போடுவதை முறையாக கவனிக்க வேண்டும்.
6. மேனேஜர்கள் இருவரும் ஆண்டுக்கு ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொள்ள வேண்டியது.
7. மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஓமாந்தூரில் அல்லது சேருகுடியில் உறவினர் கூடும் கூட்டம் நடைபெறும் போது எவ்வித குறைபாடும் இல்லாமல் நடைபெற வேண்டும்.
சேருகுடி மாநாடு 1927ம் ஆண்டு:
1927ம் ஆண்டுசேருகுடியில் நம் இன மக்கள் ஒன்றுகூடி ஏற்படுத்திய உடன்படிக்கை.
1927.07.20 அன்று சேருகுடி நாட்டில் நம் இன மக்கள் ஒன்றுகூடி புதிய உடன்படிக்கை ஏற்படுத்தினார்கள். அதன்படி கீழ்கண்ட 18 நிர்வாகிகளை தங்களுக்குள் தேர்வு செய்துகொண்டார்கள். அவர்கள் முறையே...
01. ஓமந்தூர் பு. கருப்பண்ணக்கவுண்டர் குமாரர் புரவியாக்கவுண்டர்
02. ஓமாந்தூர் தேவராய பிள்ளை குமாரர் பெரியசாமி பிள்ளை
03. ஓமாந்தூர் புரவியாக்கவுண்டர் குமாரர் பெரியண்ணக்கவுண்டர்
04. முருகூர் ரா. மா. அருணாசலம் பிள்ளை குமாரர் சோமசுந்தரம் பிள்ளை
05. முருகூர் ரா. மாரிகங்காணியார் குமாரர் இராமசாமி கவுண்டர்
06. நடுவலூர் ஆண்டியா பிள்ளை குமாரர் கருப்பக்கவுண்டர்
07. நடுவலூர் பெரியண்ணக்கவுண்டர் குமாரர் தெவராய பிள்ளை
08. பெருமாள்பாளையம் பெரியண்ண பிள்ளை குமாரர் பொன்னம்பரம் பிள்ளை
09. தேனூர் சிதம்பரக்கவுண்டர் குமாரர் மருப்பக்கவுண்டர்
10. சேருகுடி மகாலிங்கம் கவுண்டர் குமாரர் இராமசாமி கவுண்டர்
11. சேருகுடி க. பெ. ஏகாம்பரம் கங்காணியார் குமாரர் க. பெ. ஏ.பொன்னுசாமி பிள்ளை
12. சேருகுடி சி. மருதையாக்கவுண்டர் குமாரர் சி.ம. பெரியண்ணக்கவுண்டர்
13. சூரம்பட்டி முனிசிப் வீரக்கவுண்டர்
14. தும்பலம் ராமசாமி கவுண்டர்
15. வடமலைப்பட்டி சி. ச. கருப்பண்ணக்கவுண்டர்
16. சம்படை மு. ரூ. மு. தைலாம்பிள்ளை
17. பொட்டிரெட்டிப்பட்டி ஆ. செ. சுப்பையா பிள்ளை, மற்றும்
18. புத்தனாம்பட்டி ராமலிங்கம் பிள்ளை குமாரர் முத்துசாமி பிள்ளை
18 உறுப்பினர்களும் நம் சாதியினர் முன் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையானது. 01, 04, 08, 15, 16, 17, ஆகிய ஆறு பேர்கள் கமிட்டி மெம்பர்களாகவும், 05 இலக்கமிட்டவர் டிரசராகவும், 12 இலக்கமிடப்பட்டவர் ஏஜண்ட் என்கிற ஆடிட்டராகவும் நியமிக்கப்பட்டனர்.
கமிட்டி மெம்பர்கள் :
1. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சத்திரம் போய் கூட்டம் கூடி சத்திரத்து வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து ஆறு பேரும் கையெழுத்து இட வேண்டும்.
2. நம் இனத்தவர் ஒருவரை ஆண்டு சம்பளம் ரூ. 240.00 கொடுத்து சத்திரத்தில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டியது.
3. மானேஜர், ஏஜண்டிடம் குறையிருப்பின் மற்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி ஆவன செய்ய வேண்டியது.
4. டிரஸரர் சத்திரம் சம்பந்தமாக வரவேண்டிய புரோநோட்டு கணக்குகளை முறையாக வசூல் செய்யவும் இருக்கும் பணத்தை உறவினர்களுக்கு மாதம் 100க்கு 10அணா வுக்கு கொடுத்து வரவு செலவு கணக்குகளை பராமரித்து வர வேண்டும்.
5. டிரஸ்ட் மேனேஜர்மார் சத்திரத்தின் நெல் வரவு செலவுகளை கவனித்து, சத்திர சம்பந்தமான கடை வாடகைகளை உயர்த்தி வசூல் செய்ய வேண்டும்.
6. 16 பிராமணர்களுக்கு மதிய போஜனம் போடுவதை முறையாக கவனிக்க வேண்டும்.
7. வருடாவருடம் ஓமாந்தூரில் அல்லது சேருகுடியில் உறவினர் கூடும் கூட்டம் நடைபெறும் போது எந்த பிசகும் இல்லாமல் நடைப்பெற வேண்டும்.
8. சேருகுடி மாநாட்டில், நம் இனத்தவர்கள் மேல் நாட்டவர்களுக்கும் கீழ் நாட்டவர்களுக்கும் சமமானவர்கள் என்று இரண்டு நாட்டு உறவின் முறையார்களும் கூடி, இரண்டு நாடும் சமம் என்று தீர்மானிக்கப்பட்டது.
9. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிலும் மாறிமாறி உறவுமுறை கூட்டம்கூட்டப்பட வேண்டும் என்றும் இரு நாட்வர்களும் கூடி தீர்மானித்தது.
சேருகுடி மகாநாடு – 1935ம் ஆண்டு:
1935ம் ஆண்டு சேருகுடி மகாநாட்டில் ஆறுநாட்டு வேளாளர் இன மக்கள் சமூகக் கூட்டம்
திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் அன்னதான சத்திரத்திற்கு, 1935ம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் 7ம் தேதி புதன்கிழமை, சேருகுடி நாட்டில் கூடி, கீழ்கண்ட 30 (முப்பது) உறவினர்களை
நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்து அவர்களின் பொறுப்பில் 36
கோத்திரகாரர்களுக்கு சொந்தமான ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தினரின் எதிர்காலத்தை
நிர்வகிக்க தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டது........
01.ஓமாந்தூர், மா. தொட்டிய பூசாரி குமாரர் வீரப்ப பிள்ளை,
02. ஓமாந்தூர், பாட்டா செட்டிய பிள்ளை குமாரர் முத்தையா பிள்ளை
03. முருகூர், ரா.மா. ராமசாமி பிள்ளை குமாரர் செல்லமுத்து பிள்ளை
04. முருகூர், ரா.மா. அருணாசலம் பிள்ளை குமாரர் சோமசுந்தரம் பிள்ளை
05. திண்ணனூர், கண்டி சிதம்பரம் பிள்ளை குமாரர் அரவாண்டிபிள்ளை
06. மணியம்பட்டி, செல்லையா பிள்ளை குமாரர் முத்துசாமி பிள்ளை
07. புத்தனாம்பட்டி, ராமலிங்கம் பிள்ளை குமாரர் முத்துசாமி பிள்ளை
08. புத்தனாம்பட்டி, மாரியா பிள்ளை குமாரர் நாகலிங்கம் பிள்ளை
09. நடுவலூர், பெரியண்ணம் பிள்ளை குமாரர் தேவராயபிள்ளை
10. சாத்தனூர், பழனியாண்டியா பிள்ளை குமாரர் சுந்தரம் பிள்ளை
11. பெருமாள்பாளையம், பெரியண்ணம் பிள்ளை குமாரர் பொன்னம்பலம் பிள்ளை
12. பெருமாள்பாளையம் , பெரியண்ணம் பிள்ளை குமாரர் முத்தையா பிள்ளை
13. மாணிக்கபுரம், புரவியா பிள்ளை குமாரர் செட்டியா பிள்ளை
14. வேங்கடத்தானூர், முத்துகருப்ப பிள்ளை குமாரர் முத்தையா பிள்ளை
15. அடைக்கம்பட்டி, மு வெள்ளையா பிள்ளை குமாரர் வைத்திலிங்கம் பிள்ளை
17. தும்பலம், பெரியண்ணம் பிள்ளை குமாரர் ராமசாமி பிள்ளை
18. சூரம்பட்டி, தாண்டவக் கவுண்டர் குமாரர் நாச்சியாக் கவுண்டர்
19. ஜம்பமடை, ராமசாமி பிள்ளை குமாரர் முத்தையா பிள்ளை
20. வடமலைப்பட்டி, சப்பாணிக் கவுண்டர் குமாரர் முத்துசாமிக்கவுண்டர்
21. பூலாஙஞ்சேரி, க. முத்தையாக் கவுண்டர் குமாரர் பெரியண்ணக் கவுண்டர்
22. காவேரிப்பட்டி பழணியான்டியாப்பிள்ளை குமாரர் கருபண்ண பிள்ளை
23. ரெங்காச்சி புதுப்பட்டி சித்திரை கவுனட்ர் குமாரர் வைத்திலிங்கம் கவுண்டர்
24. ஒக்கரை, முத்தையாக்கவுண்டர் குமாரர் செல்லக்கவுண்டர்
25. கலிங்கப்பட்டி, வீரப்பக்கவுண்டர் குமாரர் ஒத்தாக்கவுண்டர்
26. மங்கப்பட்டி, முத்தையாக் கவுண்டர் குமாரர் சிதம்பரம் பிள்ளை
27. கள்ளுக்குடி, செல்லக்கவுண்டர் குமாரர் கருப்பக்கவுண்டர்
28. வடமலைப்பட்டி, முத்தையாபிள்ளை குமாரர் தேசோமயானந்தம்
29. ஆலம்பட்டி, கருப்பக்கவுண்டர் குமாரர் வைத்திலிங்கக் கவுண்டர் மற்றும்
30.பொட்டிரெட்டிப்பட்டி, செவந்திக்கங்காணியார் குமாரர் சுப்பையா பிள்ளை ஆகியோராவர்.
இவர்களுள் 4,5,7,9,11,18,19,30 இலக்கமிட்டவர்களுடன் மேலும் நான்கு முன் அனுபவம் உள்ளவர்களை கவுரவ உறுப்பினர்களாக இணைத்து, 12 உறவினர்களை கமிட்டி மெம்பர்களாகவும், 3 இலக்கமிடப்பட்டவர் பொக்கிஸதாரராகவும், தற்காலிகமாக 2ம் இலக்கமிட்டவரை ஏஜன்ட்டாகவும் நியமித்தார்கள்.
கமிட்டியார், பொக்கிஷதாரர், ஏஜண்டுகள் எப்போதும் போல் சேவை செய்ய நியமிக்கப்பட்டார்கள்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை திருவானைக்காவல் சத்திரத்தில், கமிட்டி உறுப்பினர்கள் கூடி வரவு செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்து தலைவர் மெம்பருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
கமிட்டியார் , நம் சாதியினர் ஒருவரை வருடம் ரூ. 240.00 க்கு மேற்படாமல் நியமித்து பணியமர்த்த வேண்டும். பொக்கிஷதார், சங்கத்துக்கு வரவேண்டிய பாக்கிகளை முறையாக வசூல் செய்ய வேண்டியது. 16 பிராமணர்களுக்கு தவறாது ஒரு வேலை மதிய போஜனம் வழங்கவும், கோடைக் காலங்களில், பாதசாரிகள் தாகசாந்தியடைய தண்ணீர் பந்தல் அமைத்தும் செயல்பட வேண்டும்.
பிரதி மாதம் மூன்றாம் தேதிக்குள் முதல்மாத, வரவு செலவு கணக்குகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டியது.
நம் உறவின் முறையார்கள் மூன்று வருடத்திற்கு ஒரு முறை மாறி மாறி ஓமாந்தூரில் அல்லது, சேருகுடியில் மாநாடு கூட்ட வேண்டியது. ஷை நாட்டவர்கள் சிரத்தை குறைவாயும், பொறுப்பற்றவராயுமிருந்துமாநாட்டை கூட்டி வைக்காவிட்டால், மெம்பர்கள் மேற்படி மாநாட்டை ஓமாந்தூர் சேருகுடி நாடுகளில் மேற்படி கூட்டத்தை கூட்டி வைக்க தக்க முயற்சி எடுத்து கூட்டிவைக்க வேண்டியது. அப்படி முயற்சி எடுத்தும் மேற்படி நாட்டார் ஒத்து வராவிட்டால், பங்குனி மாதம் முதல் தேதியில் இருந்து முப்பதாம் தேதிக்குள் கமிட்டி மெம்பர்களே ஓலை எழுதி உறவின் முறையை திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் அன்னதான தர்ம சத்திரத்தில் கூட்டம் கூட்டிவைக்க வேண்டியது.
நாளது தேதி வரையுள்ள சத்திரம் சம்பந்தமான ரிக்கார்டுகள் அனைத்தையும் பிரசிடென்ட் அவர்கள், உறவின் முறை கூடும் காலத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
நாம் அனைவரும், ஆறுநாட்டு வேளாள சாதி மிராஸ்தார் அந்தஸ்துள்ளவர். எனவே, நாம் சம்மதித்து உடன்படிக்கை செய்துக் கொண்டப்படியால், கமிட்டி மெம்பர்களும் பொக்கிஷதாரரும் ஏஜண்டும் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருகின்ற திட்டப்படி, வேலைப் பார்த்து வரவேண்டும்.
1939ம் ஆண்டு (01.09.1939) கூடிய மாநாட்டு கூட்டத்தில்:
உறவினர்கள் ஏகமனதாக வி. மு. ராமசாமிபிள்ளை அவர்களை அக்ராசனம் வகிக்கும்படியாக தீர்மானிக்கப்பட்டார்.
வரவு செலவு கணக்குகளை காலை 10.00 மணிக்கு மாநாட்டில் ஒப்புவிப்பதற்காக,
01. வெ. பழனியாண்டியா பிள்ளை,
02. கா.பெ.ஏ. பொன்னுசாமி பிள்ளை
03. பெருமாள் பாளையம் மு.செ. பெரியண்ண பிள்ளை
04. நத்தம் கோயில்பட்டிஎஸ்.எஸ். முத்தையா பிள்ளை
இவர்கள் நால்வரையும் உறவினர்கள் தேர்வு செய்தார்கள். சத்திரம் டிரசரி கணக்குகளை வாசிக்க றா.ம.றா.ம. நடராஜ பிள்ளை ஆஜராகாததால் இருநாட்டை சேர்ந்த 12 மெம்பர்களை நியமித்து அன்னாரை கூட்டிவர ஏற்படுத்தி, நியமித்த மெம்பர்.
மேல் நாட்டில் :
01. சூரம்பட்டி ராமலிங்கம் பிள்ளை
02. ஓக்கரை செ. அருணாசலம் பிள்ளை
03. ஷை த்.மு.தேவராய பிள்ளை
04. ஷை க.வீ. வீரப்ப பிள்ளை
05. காவேரிபட்டி ஆ. பெ. பெரியதம்பி பிள்ளை
06. வடமலைப்பட்டி வை. முத்துசாமி பிள்ளை
கீழ் நாட்டிற்கு:
01. நடுவலூர் தேவராய பிள்ளை
02. திண்ணனூர் மா. தெ. செ. செட்டியா பிள்ளை
03. பெருமாள் பாளையம் மு. சே. பெரியண்ண பிள்ளை
04. தேனூர் வே. செ. சொக்கலிங்கம் பிள்ளை
05. திண்ணனூர் கா. சே. ஆரவாண்டி பிள்ளை
06. பெருமாள்பாளையம் தெ. வ. அரவாண்டி பிள்ளை ஆவார்கள்.
மேற்கண்ட 12 உறவினர்களுடன் மேலும் 24 மெம்பர்களை சேர்த்து மொத்தம் 36 உறவினர்களை கொண்ட கமிட்டி அமைத்து வரும் காலங்களில் சத்திரத்தை செவ்வனே வழிநடத்தவும், தர்ம காரியங்களை செய்யவும் மகா சபையாரால் பணிக்கப்பட்டார்கள்.
செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு :
நமது சத்திரம், முருகூர் திரு. றா. மா. அ. ரு. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் இலங்கைக்கு சென்றிருந்தபடியால், 19.09.1939 (புரட்டாசி 03மீ) அன்றைய செயற்குழு கூட்டம் 08.10.1939 புரட்டாசி 22 ஞாயிற்றுக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
28.10.1939 தேதிக்குள் காலஞ்சென்ற முருகூர் செல்லமுத்து பிள்ளை அவர்கள் சத்திரத்துக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை வசூலிக்க வேண்டும் எனவும், முடியாத பட்சம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து பணத்தை வசூல் செய்ய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஷை கூட்டத்தில், 28.10.1939 அன்றைய தினத்தில், சத்திரத்தில் வாங்கிய பணத்தை செலுத்தி, கமிட்டி மெம்பர்களிடம் பணம் பெற்று கொண்டதற்கான ரசீதை, பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட சம்பவத்தை முன்னிட்டு நிரந்தர தீர்வு காண்பதற்காக, தொடர்ந்து நடந்த செயற்குழு கூட்டங்களிலும், இரு நாடுகளில் மாறி மாறி நடைபெற்ற ஆண்டு (வருடாந்திர) கூட்டங்களிலும். ஏற்படுத்திக்கொண்ட தீர்மானங்களின் படி, நம் சாதியினருக்குள் ஒரு சங்கம் ஏற்படுத்திக்கொள்ள முடிவாயிற்று. அவ்வாறு நம் சாதியினரை, சங்கமாக பதிவுச் செய்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
சேருகுடி மாநாடு 1945
1945.08.15 புதன்கிழமை அன்று, 1939ல் சேருகுடி மாநாட்டில், ஏற்படுத்திக்
கொண்ட தீர்மானத்தின் படி, சாதி சங்கம் ஏற்படுத்தி கொள்வதற்காகவும் நம் இன
குல மக்களிடம் இனக்கமான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளவும், பல தீர்மானங்களை
நிறைவேற்றிக் கொள்ளவும் ஒரு கூட்டத்திற்கான நாள் நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கான மாநாட்டை, ஓமாந்தூரில் – 07.03.1946 வியாழக்கிழமை கூட்ட
தீர்மானிக்கப்பட்டது.
15.08.1945, சேருகுடி மாநாட்டு ஒப்பந்தப்படி, முக்கியத்துவம் வாய்ந்த
ஆறுநாட்டு வேளாளர் சாதி சங்கம் நிறுவுவது என தீர்மானிக்கப்பட்டது. மகாநாடு
கூட்டத்திற்காக முறைப்படி திட்டமிட்டு, பொருத்தமான கமிட்டி நிறுவப்பட்டது.
இக்கமிட்டியினர்
31.10.1945 புதன்கிழமை அன்று, திருவானைக்காவல் அன்னதான சத்திரத்தில்
தலைவர் றா.ம. செல்லமுத்து பிள்ளை தலைமையில் கூடியது. ஷை நிர்வாகக் குழு
கூட்டத்தில் விரிவான முறையில் கீழ்கண்ட தீர்மானங்கள் தீட்டப்பட்டன.
01. 17.01.1946 திருவானைக்காவல் சத்திரத்தில் நடைபெற்ற
செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக நம் இன சாதி சங்கம் பதிவிட
எடுக்கப்படவேண்டிய முடிவுகளுக்காக அனைவருக்கும் தெரிவித்து, இவ் விஷேச
கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
02. அதற்காக நம் மக்களுக்கு தெளிவுபடுத்துவர்த்து சம்பந்தமான விஷேச
மாநாட்டை 07.03.1946 வியாழக்கிழமை அன்று, ஓமாந்தூர் நாட்டில் நடத்துவது என
தீர்மானிக்கப்பட்டது.
03. 07.02.1946 விஷேச மகாநாடு செலவு தேவைகளுக்கு உறவினர்களை கேட்டு வாங்கிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
04. ஷை மாநாட்டில், நமது அன்னதான சத்திரத்தில், ஆறுநாட்டு வேளாளர்
சங்கமாக பதிவு செய்வதன் விளக்கத்தை நம் இனத்தார்க்கு விரிவாக விளக்குவது என
தீர்மானிக்கப்பட்டது.
ஓமாந்தூர் விஷேச மாநாடு
ஆறுநாட்டு வேளாளர் சாதி சங்கம் தோற்றமும் – பட்டயமும்
1946ம் ஆண்டு மார்ச் மாதம் 07ம் நாள் – பார்த்திபவ வருடம் மாசி மீ
24ம்நாள் – வியாழக்கிழமை மாநாட்டு கூட்டத்திற்கு சுற்றுவட்ட (மேல்
நாட்டிலும் கீழ் நாட்டிலும்) கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 710
உறுப்பினர்கள் வருகை தந்து இருந்தார்கள். காலை 09.00 மணிக்கு, ஆறுநாட்டு
வேளாள சாதி உறவினர் கூட்டம் ஓமாந்தூர் கிராம சாவடியில் கூடி ஆரம்பமானது.
ஆறுநாட்டு வேளாளர் சங்கம்
நம் சாதி மக்களுக்காக அவர்களின் வளர்ச்சியை தெளிவுபடுத்தும் வகையிலும்,
ஓமாந்தூரில் நம் இனத்தார் முன் செய்துக்கொண்ட உடண்படிக்கையை செயல்படுத்திக்
கொள்ளவும், தங்களுக்குள் ஒற்றுமையையும் இனத்தாரின் கூட்டு குடும்ப
வாழ்க்கையை மேம்படுத்தவும் ஆறுநாட்டு வேளாளர் சங்கம் அமைக்கவும், யாதாஸ்து படி
ரிஜிஸ்டர் செய்ய எடுத்த முயற்சிகளை திரு. பெ. ம. வீரப்ப பிள்ளை அவர்கள்
பிரேரிக்க, திரு. ஆ. அருணாசலம் பிள்ளை அவர்களால் ஆமோதிக்கப்பட்டது.
சாதி சங்கம் அமைத்து பட்டயமாக்கள்
நம் சாதியினர் இங்கு தோற்றுவிக்கும் சங்க சட்டத்திட்டங்களுக்கு
கட்டுப்பட்டு, ஒரே குலத்தை சேர்ந்தவர்களை தவிர்த்து, தனது மாமன்மார்
(குலத்தில் – நம் இனத்தவர்களை) குடும்பத்தில் உள்ள பெண்களை திருமணம் செய்து
நமது சாதியினரின் உயர்வுக்கு ஊக்கமளிக்க வேண்டும் எனவும்
தீர்மானிக்கப்பட்டது.
ஷை ஆறுநாட்டுவேளாளர் சங்கம் ரிஜிஸ்டர் செய்ய தயாரிக்கப்பட்ட – மெமரண்டம் ஆப் அசோசியேசன்– யாதாஸ்து யாதாஸ்து
அச்சிடப்பட்ட நகல்கள் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டு ஒவ்வொரு அயிட்டமாக
நன்கு படிக்கப்பட்டது. தெளிவாக வாசிக்கப்பட்டு, எழுத்துகளை சபையோரின்
திருத்தங்களை அங்கீகரித்து திருத்தத்துடன், கூடிய நகல் மறுபடியும்
பகிரங்கமாய் படிக்கப்பட்டது.
விஷேச நிர்வாக சபை நிர்வாகிகள்
(முத்தை பதினெட்டு மாத காலத்திற்காக)
தலைவர் : ஸ்ரீ பழ. கருப்பண்ண பிள்ளை மிராசுதார், காவேரிபட்டி
உப தலைவர் : ஸ்ரீ ரா. ம. சிதம்பரம் பிள்ளை மிராசுதார், ஓமாந்தூர்
காரியதரிசி : ஸ்ரீ ஏ. பொன்னுசாமி பிள்ளை மிராசுதார், சேருகுடி
பொக்கிஷதார் : ஸ்ரீ மா. தொ. ஆ. அருணாசலம் பிள்ளை மிராசுதார், ஓமாந்தூர்
மற்றும் 40 மெம்பர்கள் நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
மொத்தமாக 44உறவினர்கள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு
18 மாத காலம் நிர்வாகம் செய்யவும், அதன் பின்னர் 1947ம் ஆண்டு முதல்
ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முறையே மேல்நாடு, கீழ்நாடு என மாறி
மாறி யாதஸ்தில் உள்ளவாறு சமமாக நிர்வாகிகள் தேர்வு செய்து மாநாடு கூட்ட
வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தற்போதைய நிர்வாகிகள் ( ஓமாந்தூர் நாடு 22, சேருகுடி
நாடு 22 ) ஆக 44 உறுப்பினர்களும் – யாதஸ்தில் குறிப்பிட்டுள்ள முறைப் படி
.......... அனைத்து நம் இன உறவினர்களையும் சங்கத்திற்கு சந்தா வாங்கி
அங்கத்தினர்கள் ஆக்க முயற்சிக்க வேண்டும் என தீர்மானிக்கப் பட்டது.
ஆறுநாட்டு வேளாளர் சங்கம் பதிவு
திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் அன்னதான சத்திரத்தில், ஆறுநாட்டு
வேளாளர் சங்கம் எனும் சாதி சங்கம், கி.பி.1946ம் (சக வருடம் 1868) ஆண்டு
மார்ச் மாதம் 25ம் தேதி
சாலி வாகன ஆண்டு அல்லது சக ஆண்டு
{ மேற்கு சத்ரபதிகள் நாட்டு மன்னர் ருத்திரசேனரின் உருவம் பொறித்த வெள்ளி
நாணயம் (ஆண்டு ரி.பி.202-222) நாணயத்திற்கு பின்புறம் பிராமி எழுத்தில் சக
ஆண்டு 121 என பிராமி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது).
சாலிவாகன ஆண்டு அல்லது சக ஆண்டு என்பது சாலிவாகன ஆண்டுக் கணிப்பு முறையின்
கீழ் குறிக்கப்படும் ஆண்டைக் குறிக்கும். இந்து நாட்காட்டி, இந்தியத்
தேசிய நாட்காட்டி, கம்போடிய பௌத்த நாட்காட்டி என்பன இம்முறையையே
கைக்கொள்ளுகின்றன. கெளதமிபுத்திர சதகர்ணி என்றும் அழைக்கப்படுகின்ற
சாலிவாகனன் என்னும் சாதவாகன மன்னனே. அவன் உஜ்ஜயினியின் விகிரமாதித்தனுக்கு
எதிராக பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக கி.பி.78 ஆம் ஆண்டுவரை
புழக்கத்தில் இருந்தது. பின்னர் ஜாவானிய இசுலாமியக் கலப்பு முறையான அன்னோ
ஜவானிக்கோ என்னும் முறையின் அறிமுகத்துடன் இது வழக்கொழிந்தது.
பண்டைய கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட ஆண்டு முறைகளில் இதுவும் ஒன்றாகும்.)}
திருச்சிராப்பள்ளி பதிவுவாளர் அலுவலகத்தில் 25.03.1946 அன்று, பதிவு செய்யப்பட்டு, ஆறுநாட்டு வேளாளர் சங்கம் முறையாக செயல்பட ஆரம்பமானது.
ஆறுநாட்டு வேளாள சாதி மக்கள், பாரதத்தின் தெற்கே, தமிழ்நாட்டின் மத்தியில்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் வார்ட் எண் 3ல்,
திருவெள்ளி முத்தம் கிராமத்தில் உள்ள திருவானைக்காவலில் S.F. எண் 2195
கொண்ட சன்னதி தெருவில் இல.1 மற்றும் 2 ஆகிய இடங்களை, 1860ம் ஆண்டு சட்டவிதி
XXI ல் 5/1946 எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டது
இது வரையில், ஆறுநாட்டு வேளாளர் அன்னதான சத்திரத்தில் நடைபெற்று வந்த
அத்தனை கைங் காரியங்களையும் முழுமையாக ஆறுநாட்டு வேளாளர் சங்கம்
பொறுப்பேற்று நடத்த வேண்டும் எனும் தீர்மானத்திற்கு இணங்கி செயல்படத்
துவங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மார்ச் மாதம் 31 முடிய உள்ள
கணக்குகளை முறையாக மகா சபையாரால் நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர் கொண்டு
தணிக்கை செய்யப்பட்டு, அதனை செப்டம்பர் மாத இறுதிக்குள் பொதுக்குழுக்க்
கூட்டத்தில் நம் இன மக்களுக்கு விளக்கமாக தெளிவுப்படுத்தி ஒப்புதல்
பெறப்படுகிறது.
இக்கணக்கினை முறையாக அரசு பதிவாளர் அலுவலகத்தில் சமர்பித்து அரசு முத்திரையுடன் ஒப்புத்தல் பதிவு பெறப்படும்.
(யாதஸ்தில் ஏதாவது திருத்தங்கள் செய்ய நேரிட்டால், முறையாக மகா
சபையினரின் ஒப்புதலுடன் பதிவாளர் அலுவலகத்தில் சமர்பித்து
திருத்தங்களுக்கான தொகையை செலுத்தி திருத்தங்களை பதிவு செய்து கொள்ள
வேண்டும்).
சத்திரம் ஆரம்பித்ததன் நோக்கம், அன்னதானம் செய்வதாகும். அதன் படி,
12 பிராமணர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிரமம் ஏற்படுவதால் மதியம்
ஐவருக்கும் மாலையில் நால்வருக்கு எனவும் போஜனம் வழங்க தீர்மானிக்கப்பட்டது
காலப் போக்கில் நம் உறவின் மாணவர்கள், உயர் கல்வி பயில்வதற்கு
எதுவாக, மதிய மற்றும் இரவு உணவு வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
30.03.1946 முதலாவது செயற்குழு கூட்டம் – சனிக்கிழமை தலைவர் திரு. பழ. கருப்பண்ண பிள்ளை தலைமையில் கூடியது.
நமது சங்கத்தின் பணம் பட்டுவாடாக்களை இனி வரும் காலங்களில்
01. இம்பிரியல் பேங்க்
02. இந்தியன் பேங்க் லிமிட்டட் மற்றும்
03. ஆறுநாட்டு பேங்க் லிமிட்டட்
ஆகிய வங்கிகளில் முதலீடு செய்வதென தீர்மானிக்கப்பட்டது
திருச்சி சப் கோர்ட் வழக்கு எண் 91/1939, ல் உள்ள பணத்தைப் பெற்று நஞ்சை நிலங்கள் வாங்க தீர்மானிக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில், சங்கம் சம்பந்தமான வழக்குகளை, தலைவர், உப தலைவர்,
செயலாளர் மற்றும் பொருளாளர் சந்திக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
சங்கத்திற்கு பொது முத்திரை தயாரிக்கப்பட்டு வட்டமாக வடிவமைக்கப்பட்டு கீழ்கண்டவாறு உள்ள அமைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
வங்கி கணக்குகளை பொக்கிஷதார் கவனிக்க வேண்டும் எனவும், செக்குகளில்
பொக்கிஷதாருடன் கூட்டாக உபதலைவர் அவர்களும் கையொப்பம் இட வேண்டும் என
தீர்மானிக்கப்பட்டது.
07வது தீர்மானம்
சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் க.பொன்னுசாமி பிள்ளை அவர்களுக்கு
மாதம் ஒன்றுக்கு ரூ. 30.00 வீதம் வழங்கி சங்கத்தில் முழுமையாக இருந்து
ஆரம்பகால கணக்குகளை பார்க்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
1946.10.06 தீர்மானம்
01. os 91/1939ல் உள்ள பணத்தை வசூலிக்க ஏற்பாடு செய்ய
தீர்மானிக்கப்பட்டது. நிர்வாகிகள் மேற்கண்ட பணத்தை வசூல் செய்து அதில்
செலவுகள் நீக்கி மீதியில் ரூ. 60000.00த்தை திருச்சி இம்பிரியல் வங்கியில்
போட வேண்டும். ஐடி தொகையில் இருந்து ரூ. 55000.00 க்கு 07-03-1946
மகாநாட்டு தீர்மானத்தின்படி, நீர் பாசனமுள்ள நிலங்கள் வாங்க ஏற்பாடு செய்ய
வேண்டும். வெளியில் உள்ள பணங்களை வசூலித்து, ஆறுநாட்டு வின்கியில் போட
தீர்மானிக்கப்பட்டது.
1947.07.12 அன்றைய கூட்டத்திற்கு போதிய அங்கத்தினர் வர
இயலாமையினால், கூட்டத்தில் வந்தவர்களிடம் சில முக்கிய தீர்மானங்களை
பதிவிட்டுள்ளனர். அதன் படி, 1947.09.19 அன்று சேருகுடியில் மகாநாடு
நடத்துவதாகவும், கோர்ட்டில் இருந்து வரும் பணத்தில் 55,000.00 க்கு காவேரி
பாசனத்தில் உள்ள நஞ்சை நிலங்கள் வாங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
1947.07.19 தீர்மானங்கள்.
சிதம்பரம் மடம் மராமத்து வேலைகள், திருவெள்ளரை மண்டபம் மராமத்து வேலைகள் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
19.09.1947 அன்று சேருகுடிநாட்டில் ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தின் இரண்டாவது மகாநாடு நடத்த தீர்மானிக்கப் பட்டத்து.
ஆறுநாட்டு வேளாளர் சங்கம்
முதல் சாதாரண மகா சபை : இரண்டாம் நிர்வாக கமிட்டி தேர்வு
சர்வசித்து வருடம் புரட்டாசி மாதம் 03ஆம் திகதி ( 19.09.1947 ) || சேருகுடி நாடு
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே”
- மகா கவி பாரதியார் தேசிய கீதங்ககள் 31
கூட்டத்தில் 301 உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள். பகல் 04.00 மணிக்கு
தலைவர் ஸ்ரீ. பழ. கருப்பண்ண பிள்ளை அவர்கள் தலைமையில் மகாசபை கூட்டம்
ஆரம்பமானது.
நாம் இன்று சுதந்திர பாரதத்தின் பிரஜைகளாகிவிட்டோம். இதனால்
அள்ளவில்லா ஆனந்தம் அடைகிறோம். சுதந்திர பாரத தேவியை அரியணையில்
அமர்த்துவதற்கு, பலர் எண்ணற்ற தியாகங்களையும், பலவித கஷ்டங்களுக்கு
உள்ளாகியும், இப் புனித சேவையால் உயிர்களை நீஈத்தும் இருக்கிறார்கள். அவ
அவர்களுக்கு நமது வணக்கங்கள் உரித்தாகும். அவர்களின் ஆத்மா சாந்தியடைய
அனைவரும் பிரார்த்திக்கிறோம்.
சத்தியத்தையும் அகிம்சையையும் ஆயுதமாகக் கொண்டு நாடு சுதந்திரம் பெற
வழிகாட்டிய நம் தேசத்தின் தனி பெரும் தலைவரும் தந்தையுமான மகாத்மா காந்தி
அவர்களை வணங்குகிறோம்.
-வந்தே மாதரம்
-
என, தலைவர் ஸ்ரீ பழ. கருப்பண்ண பிள்ளை, சூளுரைத்த உடன், சபையோர் அனைவரும்
எழுந்து நின்று வந்தே மாதரம் என உரக்க சொல்லி கைதட்டி ஏகமனதாக ஆமோதித்து
தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.-
விய வருடம் பங்குனி மீ 31 31 முடிய உள்ள வரவு செலவு கணக்குகள்
ஆடிடர்களால் தணிக்கை செய்யப்பட்டு, கடந்த 18 மாத கால நிர்வாகத்தின் செயல்
பாடுகளும் மகாசபையோருக்கு வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஷை தணிக்கை
ரிப்போர்ட் ஏகமனதாக அங்கீகரிப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
இரவு போஜனத்திற்கு பின்னர் கூட்டம் ஆரம்பமானது.
01. OS/1939ல் உள்ள பணத்திற்கு, பாசனத்தில் உள்ள நஞ்சை நிலம் வாங்க தீர்மானிக்கப்பட்டது.
02. யாதாஸ்தில் உள்ளப்படி, 1947 முதல் 1950 முடிய உள்ள மூன்று வருடங்களுக்கான புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
சாதி சங்கம் தோற்றுவித்து, சங்கம் பதிவான பின்னர் தேர்வான முதலாவது நிர்வாகக் குழு ( 1947 – 1950):
தலைவர் : திரு. ம. தொ. ஆ. அருணாசலம் பிள்ளை, ஓமாந்தூர்.
உப தலைவர் : திரு. பழ. கருப்பண்ண பிள்ளை, காவேரிப்பட்டி
பொக்கிஷதார் : திரு. T.M. தர்மலிங்கம் பிள்ளை, வீரமச்சான்பட்டி
காரியதரிசி : திரு. மு. ஏகாம்பரம் பிள்ளை, மாணிக்கபுரம்
இவர்களுடன் 40 மெம்பர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்வு
செய்யபட்டார்கள். இதனை தொடர்ந்து கூட்டம் மறு நாளைக்கு (20.09.1947க்கு)
ஒத்திவைக்கப்பட்டது
20.09.1947 அன்று காலை 09.00 மணிக்குதலைவர் ஸ்ரீ. பழ. கருப்பண்ண பிள்ளை அவர்கள் தலைமையில் மகாசபை கூட்டம் ஆரம்பமானது.
சபையோர் முன்னிலையில், சங்க ஆடிட்டர் நியமிக்கப்பட்டது. ஆடிட்டர்
அவர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூபா. 100.00 செலுத்தவும்
தீர்மானிக்கப்பட்டது.
os91/1939ல் உள்ள பணத்தை எடுத்து பயன்படுத்த முயற்சிக்கவும், ஷை பணத்தை வட்டியுடன் கோர்ட்டில் வாங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
ஒப்பம் .. பழ. கருப்பண்ண பிள்ளை
தலைவர் - 20.09.1947
முதலாவது செயற்குழு கூட்டம் 26.09.1947 அன்று திருவானைக்காவல் ஆறுநாட்டு
வேளாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது.
திருவானைக்காவல் சங்கக் கட்டிடமும், சிதம்பரம் மடமும் மராமத்து வேலைகள் செய்து சீர் திருத்தம் செய்யப்பட்டது.
வடபுறம் பாதுகாப்பு சுவர் எழுப்பப்பட்டது. வடக்கு பகுதிகிரயத்திற்கு கிடைத்தால் வாங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
os 91/1939ல் உள்ள பணத்தை எடுத்து, தேவதானத்தில் நஞ்சை நிலம் 5.44
ஏக்கர் வாங்கப்பட்டது. யாதாஸ்து விதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்த
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1948.02.04 அன்றைய கூடத்தில் அண்ணல் காந்தி அவர்களின் அகால மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1949.02.06 அன்றைய கூட்டத்தில், தேவதானம் கிராமத்தில் கே.
பி. ராமச்சந்திரன் ஐயரிடம் உள்ள 2ஏ 51 செ. நஞ்சை நிலமும், ஏ.02 செ. 97
நஞ்சை நிலமும் வாங்க தீர்மானிக்கப்பட்டது.
1949.05.05 கூட்டத்தில், புதிய அங்கத்தினர்கள் சேர்ப்பதற்கு, மாதம்
ரூபா. 30.00 வீதம் சம்பளம் கொடுத்து, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள்
செயல்படுத்த ஆள் நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
1949.12.07 – அன்றைய கூட்டத்தில், கோர்ட்டில் உள்ள
வழக்கிற்கு செலவு செய்த தொகைக்காக வாங்கிய கடன்களை திரும்ப கொடுப்பது என
தீர்மானிக்கப்பட்டது. தேவதானத்தில் கிரயமான நிலங்களின் பத்திர விவரங்கள்
பற்றி கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
1950.06.07 புதன்கிழமை கூட்டத்தில், மூன்றாவது மகாநாடு 31.08.1950 அன்று நடத்த தீர்மானிக்கப்பட்டது.
ஆறுநாட்டு வேளாளர் சங்கம்
சாதாரண இரண்டாம் மகா சபை கூட்டம்
ஓமாந்தூர் – 31.08.1950 வியாழகிழமை
கூட்டத்திற்கு 326 உறுப்பினர் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திரு. ராம. சிதம்பரம் பிள்ளை பிரேரிக்கப்பட்டு, திரு. மா. தொ. ஆ. அருணாசலம்
பிள்ளை அவர்களால் ஆமோதிக்கப்பட்டு இம் மகாநாட்டு தலைவராக பணியாற்ற
புத்தனாம்பட்டி திரு. மா. நாகலிங்கம் பிள்ளை அவர்களை, ஏகமனதாக
தீர்மானித்தார்கள்.
காலை 10.30 மணிக்கு கூடிய கூட்டத்தில், நெல் வரவு செலவு கணக்கு
பற்றி விவாதிக்கப்பட்டு, கணக்குகளை மாலை 05.00 மணிக்குள் சரி பார்த்து
வழங்க ஏழு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. செயலாளர் அறிக்கை
சபையோர்க்கு வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் மகாசபைக்கூட்டம்
1950 முதல் 1953 மூன்றாம் நிர்வாக குழுவினர் தேர்தல்
தலைவர் : திரு. ரா. மு. முத்தையா பிள்ளை – ஜம்பமடை
துணைத்தலைவர் : திரு. மா. நாகலிங்கம் பிள்ளை – புத்தனாம்பட்டி
செயலாளர் : திரு. சி. மு. பெரியண்ண பிள்ளை – சேருகுடி
பொருளாளர் : திரு. ரா. மு. சிதம்பரம் பிள்ளை – ஓமாந்தூர்
முதலாவது நிர்வாகக்குழு கூட்டம் திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர்
அன்னதான சத்திரத்தில் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி
வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதிய மேனேஜராக சூரம்பட்டி திரு. கா. அர.....கவுண்டர் நியமிக்கப்பட்டார்.
1951.06.21 கூட்டத்தில், அப்பர் கட்டமுது தண்ணீர் பந்தல் அமைப்பது
சம்பந்தமாக திட்டம் வகுக்க, ஆறு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.
1951.06.21 கூட்டத்தில், அப்பர் கட்டமுது தண்ணீர் பந்தல் அமைப்பது
சம்பந்தமாக ஓமாந்தூர் உறவினர்களால் அனுப்பப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டது.
1951.09.20, கூட்டத்தில் 26.12.1951அன்று வசூல் செய்ய 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.
1952.12.22 கூட்டத்தில், நம் இன மாணவர்கள், 10ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்று உயர்பள்ளி, கல்லூரிக்கு படிக்க செல்லும் ஏழை மாணவர்களுக்கு
உணவளிக்க தீர்மானிக்கப்பட்டது.
நமது இடத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டது
1952.12.26 கூட்டத்தில், சத்திரத்தின் வடகோடியில் இருக்கும் இடத்தில்
நம் இன ஏழை மாணவர்கள் தங்கிபடிக்க ஒதுக்க தீர்மானிக்கப்பட்டது.
1953.04.01 அன்றைய தீர்மானத்திபடி சூரம்பட்டி திரு. மு. ரா. குகநாதன்
பிள்ளை குமாரர் திரு. தியாகராஜன். அவர்களது விண்ணப்பமும்,ஊரக்கரை
திரு.கு.மு. பழனியாண்டி பிள்ளை குமாரர் திரு. மாணிக்கம் அவர்களுது
விண்ணப்பமும் சத்திரத்தில் தங்கி படிக்க, செயற்குழுவினரால்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1953.07.03 ஆம் தேதி கூட்டத்தில் சேருகுடியில் நடைபெறவுள்ள மாநாட்டு
செலவுக்காக ரூபாய் 1500.00 மட்டும் சத்திரத்தின் சார்பாக கொடுக்க
தீர்மானிக்கப்பட்டது.
நம் இனத்தார் கிராமங்களில், கட்டுப்பாடு விஷயமாக கிராமம் தோறும் கூட்டங்கள்
போட்டு, அதன் விவரங்களை சங்கத்திற்கு, தெரிவிக்க வேண்டுமாய்
கேட்டுக்கொள்ளப்பட்டது.
மூன்றாம் சாதா மாகாநாடு
14.08.1953 சேருகுடி
நான்காம் நிர்வாகக்குழு (1953-1956)
தலைவர் : திரு. மா. தொ. ஆ. அருணாசலம் பிள்ளை – ஓமாந்தூர்
உபதலைவர் : திரு. A.S.M. ஜெகநாதம் பிள்ளை - ஆலம்பட்டி
காரியதரிசி : திரு. அ. கருபண்ண பிள்ளை – வெள்ளகல்பட்டி
பொக்கிஷதார் : திரு. க. ராமமூர்த்தி பிள்ளை – சேருகுடி
1953.12.11 அன்று, நமது சத்திரத்தில் நடைபெற்ற முதலாவது செயற்குழு கூட்டம் உபதலைவர் தலைமையில் நடைபெற்றது.
சத்திரத்திற்கு சொந்தமான இல.3 வீட்டையும் டிரங்க் ரோட்டில் இருக்கும் 59ம்
இல. வீட்டையும் வாடகைக்கு விடுவது சம்பந்தமாக, செயலாளரின் பொறுப்பிற்கு
விடப்பட்டது
ஒவ்வொரு கிராமத்திலும் கிராம கட்டுப்பாடு சம்பந்தமாக கூட்டங்கள் நடத்தி,
அதன் விவரங்களை திருவானைக்காவல் சங்கத்திற்கு அனுப்புமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டது.
1954.06.14 ஆம் திகதி கூட்டத்தில்,
தீ. 01 அனேகமாக அனைத்து கிராமங்களில் இருந்து கிராம கட்டுப்பாடு சம்பந்தமாக
இடம்பெற்ற கூட்ட விவரங்கள் வாசித்து திருப்தியடைந்தனர்.
பொட்டுரெட்டிப்பட்டி மற்றும் போடிநாயக்கனூர் அறிக்கைகளின்படி நடவடிக்கை
எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
தீ.02. மேற்படி அறிக்கைகளின் படி, பொட்டு ரெட்டிப்பட்டி மற்றும்
போடிநாயக்கனூர் ஊர்களில் இருந்து வந்த விவரங்களின் காரணமாக, முறையே
பொன்னேரி திரு. டீ. தியாகராஜன் பிள்ளை மற்றும் போடிநாயக்கன்பட்டி
திரு. பி. அம்மையப்ப பிள்ளை ஆகியோர் கலப்பு திருமணம் செய்து கொண்டதை நமது
சங்கம் வண்மையாக கண்டிப்பதோடு அவர்களை நமது சமூகத்தில் இருந்து முழுமையாக
ஒதுக்கி வைக்கிறது எனவும், அவர்களுடன் உறவு கொள்பவர் களையும் தொடர்பு
கொள்பவர்களையும் நீக்குவது என தீர்மானிக்கப்பட்டது.
(இச்செயலை கண்டித்ததன் நோக்கம், இம்மாதிரியான செயல்களில் நமது மக்கள்
ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்யும் வகையில் என்று சொல்லப்படுகிறது. நமது
சமூகத்தில் எண்ணிக்கை குறைவிற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.)
03. இதுவரை 14 மாணவர்களுக்கு சாப்பாடு போடப்படுகிறது.
1954.09.14 கூட்டம் : உபதலைவர் A.S.M. ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
தலைவர் செயலாருடன் இணைந்து செயல்படவில்லை என துணைத்தலைவர்
குற்றம்சாட்டைக் கூறியதோடு உருபினர்களும் வேறு விடயங்கள் பற்றி விவாதிக்க
விரும்பவில்லை என்று சொல்லி கூடம் தள்ளிவைக்கப்பட்டது.
25.01.1955 கூட்டம். : சங்க தலைவர் தலைமையில்
01. திரு. T. சிவஞானம் அவர்காளால் தந்தி வாசிக்கப்பட்டது.
02. 14.06.1954 கூட்டத்தின் 02 தீர்மானம் வாசிக்கப்பட்டது.
03. 14.06.1954 அன்றைய கமிட்டி கூட்டம், தீர்மானம் 02சரியெனவும் அதில்
உள்ள அங்கத்தினர் யோக்யதாம்சம் 1-4வது பிரிவின்படி, 14.08.1053 இல்
நடப்பெற்ற மகாசபையின் 12வது தீர்மானமும் விளக்குவதை விளக்கினார்..
04. குத்தகை கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.
1955.05.17 கூட்ட்டம், தலைவர் தலைமையில் குத்தகை நெல் விவரங்கள் கேட்டு, குத்தகை வசூல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது
1955.06.16 உபதலைவர் A.S.M. ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
01. 20 மாணவர்களுக்கு உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டது .
02. குத்தகை பாக்கி வாங்க தீர்மானிக்கப்பட்டது.
03. வளவனூரில் சாகுபடி இல்லாததால் குத்தகை தள்ளுபடி செய்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
04. 25.01.1955 அன்றைய தீர்மானத்தை வாபஸ் பெறும்படி, செயலாளர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
1955.08.22 செயற்குழு கூட்டத்திற்கு தலைவர், உபதலைவர் வராததால் திரு. P. சுப்பையா பிள்ளை தலைமை தாங்கினார்.
01. 16.05.1955 கூட்டத்தின் 05வது சரத்தை ஆய்வு செய்ய விஷேச கூட்டம்
கூட்டப்படாததால், சாதாரண செயற்குழு கூட்டத்தில், அந்த விஷயத்தை மட்டும்
விசாரிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
1955.09.07 கூட்டம் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்கி 18.09.1955 க்கு
மாற்றப்பட்டது. வந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பயணப்படி
வழங்கப்பட்டது.
1956.03.01 கூடத்திற்கு, தலைவர் ஆ. வு. யு. அருணாசலம் பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார்.
திருச்சி, தாலுகா அலுவலக RCBI. 133999/55 கடிதத்தின்
சாராம்சமானது, தேவதானத்தில் சத்திரத்தின் நிலத்தில் கிட்டத்தட்ட 0.38
சென்ட்(டிசிமல்) நிலத்தை ஹரிசன மக்களுக்கு வீடுகட்டி கொடுக்க, சர்க்கார்
கேட்டுக் கொண்டதை விளக்கினார்கள்.
இதற்கு ஆவன செய்யவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி
தீர்க்கவும் தலைவர் மற்றும் செயலாளர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
1956.06.11 கூடத்திற்கு, தலைவர் ஆ. வு. யு. அருணாசலம் பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார்.
02. நம் இன 30 மாணவர்களுக்கு சத்திரத்தில் உணவளிக்க தீர்மானிக்கப்பட்டது.
1956.07.02 அன்று, தலைவர் ஆ. வு. யு. அருணாசலம் பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார்.
01. ஓமாந்தூர் கிராமத்தில் 19.08.1956 மகாநாடு நடைபெறும்.
02. அதில் அடுத்த மூன்று ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்வு செய்யபடுவார்கள்
இதுவரை நமது சமூகத்தின் முன்னோர் பற்றிய எந்த விதமாக கட்டுரைகளோ,
சரித்திரமோ விபரமாக எழுதப்படவில்லை. சிலரின் வேண்டுகோளுக்கிணங்க, ஓமாந்தூர்திரு. பு. மு. மாசிலாமணி கவுண்டர் அவர்கள், ஆறுநாட்டு வேளாளர் கோத்திர விளக்கம்
எனும் ஒரு சரித்திர விளக்கத்தை வடிவமைத்தார். இத்தகவல்களை புத்தகவடிவில்
தொகுத்து நம் இன மக்கள் சிலர் 1956ம் ஆண்டு வெளியிட்டுள்ளார்கள்.